என்ன யாரும் காப்பாத்தாதீங்க..! உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு சாலையில் ஓடிய தேன்மொழி!

உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு இளம் பெண் கலெக்டர் ஆபீஸிற்கு முன் தர்ணா செய்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் சித்தனூர் என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள மல்லமூப்பம்பட்டி என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் தேன்மொழி. இத்தம்பதியினருக்கு 11 மாத ஆண் குழந்தையுள்ளது. இவ்விருவரும் கூலி தொழிலாளர்கள்.

இந்நிலையில், நேற்று சேலம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் ஆபீஸிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டில் துறந்து உடலில் ஊற்றி கொண்டுள்ளார். அப்போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் அவர் ஓடியுள்ளார். திடீரென்று தீக்குளிக்க முயன்ற போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் விசாரணை நடத்தியதில், 5-ஆம் தேதியன்று என்னுடைய கணவர் அரியலூர் மாவட்டத்தில் பைக்கில் சென்றபோது, பெண் மருத்துவர் குடித்துவிட்டு வந்து என் கணவர் மீது காரை மோதியுள்ளார். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த மருத்துவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் காயமடைந்த என்னுடைய கணவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்" என்பதை வலியுறுத்தி குடும்பத்தினருடன் தேன்மொழி சாலை மறியலில் ஈடுபட்டார். 

ஒருவழியாக காவல்துறையினர் அவரை சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.