ஆசையாக தாலி கட்டிய மணமகன்! ஆனால் மணப்பெண்ணுக்கு கொரோனா..! முதலிரவுக்கு தடை விதித்த அதிகாரிகள்! மணமக்களை பிரித்த பரிதாபம்!

திருமணமான கையோடு மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவமானது கெங்கவல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கெங்கவல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் ஜனவரி மாதத்தில் இருவீட்டார் முன்னிலையில் இன்று திருமணம் நடைபெறும் என்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. 

இதற்காக 21-ஆம் தேதியன்று இளம்பெண் சென்னையிலிருந்து கெங்கவல்லிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது மாவட்ட எல்லையான நந்தக்கரையில் சோதனை சாவடியில் அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில் அந்த பெண் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட படி இன்று குடும்பத்தினர் முன்னிலையில் அப்பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த உடனே சுகாதாரத்துறையினர் மாப்பிள்ளையை அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் புதுப்பெண் மற்றும் திருமணத்தில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்தி உள்ளனர். இந்த செய்தியானது அப்பகுதியில் வைரலாகி வருகிறது.