திருமண நாளுக்கு பெற்றோரை வீட்டுக்கு அழைத்த இளம் பெண் டீச்சர்..! ஆசையாக அங்கு சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! என்ன தெரியுமா?

திருமண நாளன்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது புதுடெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுடெல்லியில் அங்கித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் அகன்ஷா. அகன்ஷாவின் வயது  27. இவர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இருவரும் 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சில நாட்களுக்கு முன்னர் இத்தம்பதியினருக்கு 2-வது திருமண நாள் வந்துள்ளது.

ஆனால் அன்று அங்கித், அகன்ஷாவுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் அகன்ஷா மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அகன்ஷா தன்னுடைய பெற்றோருக்கு கால் செய்து உடனடியாக கணவர் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். 

அவர்கள் வேறு ஊருக்கு சென்று இருந்ததால் வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது. அவர்கள் வந்தபோது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அகன்ஷா தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். தங்களுடைய மகள் சடலமாக கிடப்பதை கண்டு பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர்.

தங்களுடைய மகளின் மரணம் குறித்து அவர்கள் கூறுகையில், "எங்களுடைய மகளுக்கு 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தை இல்லாத காரணத்தினால் அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.   மேலும் மாதாமாதம் வலுக்கட்டாயமாக அவருடைய சம்பளத்தை பிடுங்கி கொண்டுள்ளனர். மாமியார் வீட்டில் கொடுமையை தாங்க இயலாத காரணத்தினாலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். எங்களுடைய மகளின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது புதுடெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.