நள்ளிரவில் காதில் பயங்கர வலி! துடிதுடித்த பெண்ணுக்கு மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி! டாக்டர்களோ மிரட்சி!

இளம்பெண்ணின் காதுக்குள் கரப்பான்பூச்சி இருந்த சம்பவமானது வியட்னாமில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண் வியட்நாமில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் கடுமையான காதுவலியால் அவதிப்பட்டு வந்தார். காது வலியை தாங்கிக் கொள்ள இயலாததால் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்றார்.

அவருடைய காதை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். அவருடைய காது பெரிய கரப்பான் பூச்சி ஒன்று ஒளிந்து கொண்டிருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்ணிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு எண்டோஸ்கோபி சிகிச்சையின் மூலமாக அந்த கரப்பான் பூச்சி வெளியே எடுக்கப்பட்டது.

சிகிச்சை செய்த மருத்துவர் கூறுகையில், "அந்தப்பெண்ணின் காதுகளில் கரப்பான் பூச்சி ஒளிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பெண்ணின் காதினுள் கீறல்கள் ஏற்பட்டிருந்தன. கரப்பான் பூச்சியினால் கீறல்கள் ஏற்பட்டதா இல்லை வெளியே எடுக்கும்போது கீறல்கள் ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வானிலையில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கரப்பான்பூச்சிகள் கீழிருந்து மேலே உயர்ந்து செல்லும். அதுபோன்று கரப்பான் பூச்சி பெண்ணின் காதை குகை என்று நினைத்து உள்ளே சென்றிருக்கலாம்" என்று கூறினார்.

இந்த செய்தியானது வியட்நாம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.