பொள்ளாச்சியில் பட்டப்பகல்! கையில் சரக்கு, வாயில் புகை! ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து இளம் பெண் செய்த செயல்! வைரல் வீடியோ!

இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு மது அருந்தியுள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட பெரியார் திடல் எனும் இடத்தில் பிரபலமான பிரியாணி கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் வாயிலில் இன்று மதியம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் இளம்பெண் ஒருவர் சர்வசாதாரணமாக மது அருந்தி கொண்டிருந்தார்.

இதனை அவ்வழியே சென்ற பொதுமக்கள் பலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோவை கண்ட பொள்ளாச்சி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தொடங்கினர். ஆட்டோவின் உரிமையாளர் பொள்ளாச்சி மாவட்டத்தில் உள்ள வடுகம்பாளையத்தில் வசித்து வரும் செல்வகுமார் என்பவர் ஆவார்.

அவருடைய வயது 48. மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் மது அருந்திக் கொண்டிருந்த இளம்பெண் ஹைதராபாத் நகரத்தை சேர்ந்த கௌதமி என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

மேலும் கௌதமி தன்னுடைய கணவரை பார்ப்பதற்காக பொள்ளாச்சிக்கு வந்திருந்துள்ளார்‌. கணவரை பார்த்த பிறகு மீண்டும் ஊருக்கு செல்ல ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள மதுக்கடையை சென்று மது பாட்டில்களை வாங்கியுள்ளார். பின்னர் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

மேலும் பொது இடத்தில் பெண் ஒருவர் மது அருந்துவதற்கு வழிவகுத்ததற்காகவும், பொது இடத்தில் சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்ததற்காகவும் காவல்துறையினர் செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவாகியுள்ள கௌதமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.