நடுரோட்டில் செம டான்ஸ் மூவ்..! பெண் பட்டதாரியின் வைரல் வீடியோ உள்ளே! அசர வைக்கும் காரணம்!

நடனம் மூலம் இளம்பெண் ஒருவர் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மத்திய பிரதேச மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தில் சாகர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் சுபி ஜெயின் என்ற 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். புனே மாநிலத்திலுள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வருகிறார். 

இவர் தன்னுடைய பட்டப்படிப்பின் போது 15 நாட்களுக்கு இன்டர்ன்ஷிப் முறையில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தன்னார்வலராக செயல்பட்டு வருகிறார்.

சாலையில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற தன்னுடைய நோக்கத்தை மத்தியபிரதேசம் போக்குவரத்து காவல்துறை ஆணையரிடம் தெரிவித்துள்ளார். இந்தூர் மாநகர காவல்துறை ஆணையர் 15 நாட்களுக்கு அவருக்கு டிராபிக் காவல் அதிகாரி உடை வழங்கி அனுமதி அளித்தார்.

சுபி ஜெயின் இந்தூர் பிரதான சாலைகளில் தன்னுடைய அழகிய நடனங்களின் மூலம், ஹெல்மெட் அணிதல், வேகக்கட்டுப்பாடு, காரில் சீட் பெல்ட் அணிதல் ஆகையால் விழிப்புணர்வுகளை வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தி வருகிறார்.

இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாகன விதிகளை சரியாக பின்பற்றுபவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார். இந்த சம்பவமானது இந்தூர் நகரில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று ரஞ்சித் குமார் என்ற போக்குவரத்து காவல் அதிகாரி மைக்கேல் ஜாக்சன் நடனத்தின் மூலம் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.