சிறுவனை கயிற்றில் கட்டி பல அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறக்கிய பெற்றோர்..! நெகிழ வைக்கும் காரணம்! பதற வைக்கும் வீடியோ உள்ளே!

கிணற்றில் தவறி விழுந்த நாய் குட்டியை மீட்பதற்காக சிறு குழந்தையை பல அடி ஆழமுள்ள கிணற்றில் இறக்கிவிட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் சிறுவன் கிணற்றுக்கு செல்வது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அதாவது இளைஞர்கள் சிலர் கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு சிறுவனின் உடலில் கயிற்றை கட்டி கொண்டிருந்தனர்.

சிறுவனின் உடலில் தேவையான அளவிற்கு கயிற்றை கட்டிய பிறகு அந்த சிறுவனை பத்திரமாக கிணற்றுக்குள் இறக்கிவிட தொடங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக அந்த சிறுவனும் கிணற்றுக்குள் செல்ல தொடங்கினான். இதனை அருகிலிருந்த மற்ற இளைஞர்கள் சிலர் வீடியோவாக படமெடுத்து கொண்டு இருந்தனர்.

ஒருவழியாக சிறுவனை பத்திரமாக கிணற்றின்  ஆழ்பகுதிக்குள் இறக்கிவிட்டனர்.  அந்த சிறுவனும் அங்கு ஏதோ தேடியபடி இருந்துள்ளான். பின்னர் ஒருவழியாக அங்கிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்து விட்டதாக மேலே உள்ளவர்களிடம் கூறியுள்ளான். உடனடியாக இளைஞர்கள் சிறுவனை பத்திரமாக மேலே இழுக்க தொடங்கினர். 

மேலே வந்தவுடன் எந்த பொருளை எடுத்து வந்தால் என்று பார்த்தால், அப்பகுதியில் ஆசையாக வளர்க்கப்பட்டு வரும் ஒரு நாய்க்குட்டி தவறுதலாக கிணற்றில் விழுந்து விட்டதாகவும் அதனை காப்பாற்றுவதற்கே இவ்வாறு சிறுவனை கீழே இறக்கி விட்டதாகவும் இளைஞர்கள் கூறினர். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.