ஆசை ஆசையாக காதல்! ஆனந்தத்துடன் திருமணம்! காதல் ஜோடிக்கு பிறகு நேர்ந்த பயங்கரம்!

திருமணமான இளம் காதல்ஜோடி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் பாரபங்கி என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் ஓம் சந்திர யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் சிவம். சிவம் அதே கிராமத்தை சேர்ந்த சோனி வர்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுடைய திருமணத்தை அறிந்த இருவீட்டாரும் கடும் கோபம் அடைந்தனர். காதல் ஜோடியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். தங்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் என்பதை அறிந்த காதல் ஜோடி கிராமத்திலுள்ள ஆலமரத்தில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.