நீர்ச்சத்து தரும் புடலை சாப்பிட்டால் ஞாபகசக்தி கிடைக்குமா !!

வீட்டு முன்வாசல் அல்லது பின்வாசலில் வளர்க்கப்படும் கொடி வகையில் முக்கியமானது புடலங்காய். இதன் மருத்துவத்தன்மை அறிந்துதான் முன்னோர்கள் இதனை வீட்டுக்கொடியாக வளர்த்தார்கள்.


 உலக அளவில் இந்தியாவில்தான் புடலை அதிகமாக பயிரிடப்படுகிறது.  இளத்தல், கொத்துப் புடலை, நாய்ப் புடலை, பன்றிப் புடலை, பேய் புடலை என பல வகைகள்  இருந்தாலும் கொத்துப் புடலையே உணவாகப் பயன்படுகிறது.

* குடல் புண்,  வயிற்றுப்புண், தொண்டைப்புண்  உள்ளவர்கள் அடிக்கடி படலங்காய் சாப்பிட்டு வந்தால் நோயின் பாதிப்புகள்  குறையும்.

* நார்ச்சத்து புடலையில் நிரம்பவும் இருப்பதால் அஜீரணக்  கோளாறைப் போக்கி  உணவுகளை எளிதில் ஜீரணமாக்கும்.  நன்கு பசியைத் தூண்டும்.

* புடலையில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் தேவையற்ற நீரை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.

·நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபகசக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது  என்பதால் குழந்தைகளுக்கு நல்லது.

புடலங்காயில்  பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயை மட்டுமே உணவாகப் பயன்படுத்த வேண்டும்.