மிக மிக மோசமான போருக்கு தயாராகுங்கள்..! சீன ராணுவத்திற்கு உத்தரவிட்ட அதிபர் ஜின்பிங்! அதிகரிக்கும் லடாக் பதற்றம்!

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான போருக்கு தயாராகுமாறு சீன ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.


சீன நாடாளுமன்ற கூட்டத்தின் ஒரு அங்கமாக அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் ஜின்பிங் உரையாற்றினார். அப்போது ஜின்பிங் பேசியதாவது, சீன ராணுவம் மிக மிக மோசமான போர் சூழல் வர உள்ளதாக தற்போது கருத வேண்டும். அதற்கு ஏற்ப ராணுவ வீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும்.

எந்தவிதமான சிக்கலான சூழலையும் சமாளிக்க சீன ராணுவம் தயாராக இருக்க வேண்டும். சீனாவின் சுயாட்சிக்கு பங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் அனைத்து திட்டங்களையும் ராணுவம் தவிடுபொடியாக்க வேண்டும். இவ்வாறு ஜின்பிங் ராணுவ அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால் சீனாவிற்கு யார் மூலமாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, யாருடன் போர் என்பதை ஜின்பிங் குறிப்பிடவில்லை.

ஆனால் கடந்த ஒரு மாத காலமாக லடாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. நேற்று பிரதமர் மோடி முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் சீன அதிபர் அந்நாட்டு ராணுவ வீரர்களை போருக்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.