இளைஞரின் பிறப்புறுப்பில் அட்டைப்புழு புகுந்திருந்த சம்பவமானது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறப்பு உறுப்பில் உயிர் போகும் வலி..! மருத்துவ சோதனையில் உள்ளே இருந்த விசித்திர உயிரினம்! அதிர்ந்த டாக்டர்கள்!
கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக பிறப்புறுப்பில் வலி இருந்துள்ளது. சரியாகிவிடும் என்று நினைத்த அந்த இளைஞருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்த சிலநாட்களில் தாங்க முடியாத அளவிற்கு வலி அதிகரித்துள்ளது.
வேறு வழியின்றி அந்த இளைஞர் மருத்துவர் ஒருவரை நாடினார். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் இளைஞரின் பிறப்புறுப்பில் 7 செ.மீ. உயரமுள்ள அட்டைப்புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில், சமீபத்தில் ஒரு குளத்தில் குளிக்க சென்றதாகவும், அப்போது அட்டைப்புழு பிறப்புறுப்பில் நுழைந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
அந்த அட்டைப்புழு சில நாட்கள் ரத்தம் குடித்து 7 செ.மீ. வரை உயர்ந்திருந்தது. பின்னர் மருத்துவர்கள் பொருத்தமான கருவிகளை உபயோகித்து அந்த அட்டைப்புழுவை இளைஞரின் பிறப்புறுப்பிலிருந்து வெளியே எடுத்தனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின் இளைஞர் தற்போது நலமாக உள்ளார். இந்த செய்தியானது கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.