தொடை தெரிய டவுசர்..! டைட் ஜீன்ஸ்..! மெல்லிய டாப்ஸ்..! சுட்டெறிக்கும் வெயிலில் வரிசையில் காத்திருக்கும் பெண்கள்..! அதிர்ச்சி காரணம்!

49 நாட்களுக்கு பிறகு  திறக்கப்பட்ட மதுக்கடையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்கள் முண்டியடித்துக்கொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியா முழுவதிலும் 42,836 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 11,762 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 1,389 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நாடு முழுவதிலும் நேற்றுவரை ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன‌. நாடு முழுவதிலும் மார்ச் 25-ஆம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் குடிமகன்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் பலரும்  கள்ளச்சாராயம் காய்ச்சி பருக முடிவெடுத்தனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து வந்தனர். 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறைவாக உள்ள இடங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநில அரசுகள் வருவாயை ஈட்டுவதற்காக மதுக்கடைகளை இன்று முதல் திறந்து வைத்துள்ளன. அதன்படி சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது மதுபான கடைக்கு பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு பெண்கள் இந்த வரிசையில் காத்திருந்துள்ளனர். இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்த பலரும் பெண்களை சாடி வருகின்றனர். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறுகையில், " பாருங்க யார் மதுபான கடையில் வரிசையாக நிற்கிறார்கள். இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

பெண்கள் வரிசையாக மதுபான கடையின் வாசலில் ஹோம் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.