டிக்டாக்கில் வீடியோ மூலம் விபச்சாரம்..! நடுத்தர வயது குடும்ப பெண்களின் புதிய தொழில்..! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

தோழிகள் போன்று நடித்து பெண்களை பாலியல் தொழிலில் சேர்ப்பதற்கு ஒரு கும்பல் அலைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


டிக்டாக் செயலியினால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளன. பெண்கள் பல முகம் தெரியாத நபர்களிடம் சிக்கிக்கொண்டு தவிக்கும் நிலைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காலை நேரங்களில் குடும்ப பாங்கான நடுத்தர வயது பெண் போன்று டிக்டாக்கில் வீடியோக்களை கடல் கன்னி என்பவர் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

கடல் கன்னி சத்தியமங்கலம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரவு நேரங்களில் மெட்டுகளுக்கு ஏற்றவாறு முக பாவனைகளை மாற்றி கவர்ச்சி வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வீடியோக்களுக்கு பல்லாயிரக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளன‌.

இவருடைய வீடியோக்களை பார்த்து கவரப்பட்ட லதா, சுமதி, கவிதா ஆகிய 3 பேர் கடல் கன்னியுடன் தோழிகளாகி உள்ளனர். 3 பேரும் நேராக சத்யமங்கலம் வரை சென்று உணவு பரிமாறி நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

அப்போது கடல் கன்னி 3 பேரையும் பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் 4 பேரில் யார்‌ பத்தினி என்பதை நிரூபிப்பதற்கு கடுமையாக சண்டை போட்டுள்ளனர்.  

இதன் விளைவாக கடல்கன்னி ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்காளான கடல்கன்னி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போதும் அவர் தொடர்ந்து டிக் டாக் வீடியோ பதிவு செய்து வருவது அனைவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.