பெண்களின் உள்ளாடைக்குள் ஏடா கூட பொருட்கள்! சோதனை செய்து அதிர்ந்த விமான நிலைய அதிகாரிகள்!

உள்ளாடைக்குள் பெண்கள் சிலர் தங்கம் மறைத்து வைத்திருந்த சம்பவமானது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் அந்நாட்டில் தங்கம், வெள்ளி மற்றும் இதர விலையுயர்ந்த பொருட்களை இந்திய நாட்டிற்கு கடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவர்கள் விமான நிலையத்தில் நிகழ்த்தப்படும் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக பல்வேறு வகையான நூதன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து திருச்சி  விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் "ஏர் இந்தியா" விமானம் ஒன்று வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அப்போது ஜெசிமா என்ற பெண் தன் உள்ளாடைக்குள் 29.63 லட்சம் மதிப்புள்ள 766 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பர்வீன் பானு என்ற 45 வயது பெண்ணிடம் 29.32 லட்சம் மதிப்பிலான 758 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அசன் முகமது என்ற 34 வயது நபரிடமிருந்து 19.30 லட்சம் மதிப்பிலான 499 கிராம் தங்கத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள விமானநிலைய அதிகாரிகள் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

இந்த சம்பவமானது திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.