ஆம்புலன்ஸ் விரைந்து வராததால் நெடுஞ்சாலையிலேயே பெண்ணொருவர் குழந்தையை பெற்றெடுத்தது வகை உபதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்! அதிர வைக்கும் காரணம்!

மத்தியபிரதேச மாநிலத்தில் பர்ஹான்பூர் எனும் மாவட்டம் உள்ளது. இங்கு கமலா பாய் என்ற பெண் வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இப்பெண்ணுக்கு நேற்று மதியம் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
கமலா பாயின் கணவர் ஜனனி என்ற ஆம்புலன்சை அழைத்தார். நெடுநேரமாக காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் வேறு வழியின்றி கமலா பாயின் கணவர் அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
எதிர்பாராவிதமாக நெடுஞ்சாலையில் கமலாபாய் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கும் தாய்க்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பிறகு அருகிலிருந்த மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்று மாலை மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.