கர்ப்ப பைக்கு பதில் இடதுகையை வெட்டி அகற்றிய டாக்டர்கள்! மருத்துவமனையில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!

வயிற்று பிரச்சினைக்காக சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு கையை அறுத்து மருத்துவம் செய்யப்பட்டுள்ள சம்பவமானது புத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புத்தளத்தில் மாதம்பே பிரதேசம் என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த 78 வயது தாய் ஒருவர் தன் கருப்பையை அகற்றுவதற்காக மாரவில வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். 

2 நாட்களுக்குப் பிறகு சத்திர சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்களின் கவனக்குறைவால் பெண்ணின் கையானது வெட்டப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கைகளை உடைப்பது தேவையற்றது என்பது கூட தெரியாமல் மருத்துவர்கள் பணியாற்றியுள்ளனர். இதன் பின்னர் அந்த பெண்ணை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து செய்த தவறை மூடி மறைக்க பார்க்கின்றனர்.

இதே வைத்தியசாலையில் நெஞ்சுவலி காக வந்த ஒருவருக்கு தவறுதலாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள தொடங்கினர். ஆனால் சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சகோதரர் மருத்துவர் என்பதால் சத்திரசிகிச்சை எதற்கு என்று கேட்டபோது மருத்துவர்களின் கவனக்குறைவு வெளிப்பட்டது.

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையற்ற ஆபத்தான சிகிச்சைகளை கவனக்குறைவால் செய்வது அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.