ஊசி போடப்பட்ட சிறிது நேரத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமானது வியாசர்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காய்ச்சலுக்கு ஊசி போட்ட மறு நிமிடம்..! வாயில் நுரை தள்ளி துடிதுடித்த பெண்மணி! பதறிய கணவன்! பிறகு அரங்கேறிய அதிர்ச்சி!

சென்னை வியாசர்பாடியில் சஞ்சய் நகர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு கேரளாவில் சுனில்குமார் என்பவரின் மனைவி காய்ச்சலிலில் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து காய்ச்சல் அடித்து வந்ததால் விக்னேஸ்வரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சிகிச்சையளித்த சோமசுந்தரம் என்ற மருத்துவர் சுனில்குமாரின் மனைவியான விஜ்யுவிற்கு ஊசி போட்டுள்ளார். வீட்டிற்கு வந்த சில நிமிடங்களிலேயே வாயில் நுரை தள்ளி விஜ்யு மயக்கமடைந்துள்ளார்.
உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுனில்குமார் விக்னேஸ்வரா மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பார்த்த மருத்துவர் சோமசுந்தரம் மீது புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது வியாசர்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.