என் புருசனை காணோம்..! புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு புருசன் ஆன போலீஸ்காரர்..! திருச்சி பரபரப்பு!

கணவரை காணவில்லை என்று புகார் கூற வந்த மனைவியுடன் காவல்துறை அதிகாரி ஒருவர் குடும்பம் நடத்திய சம்பவமானது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட புலிவலம் எனும் பகுதியை சேர்ந்தவர் சிராஜுநிஷா. இவருடைய தம்பியின் பெயர் முஹம்மது ஜக்ரியா.  ஜக்ரியா 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு இரு குடும்பத்தினரும் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிராஜுநிஷாவுக்கும், தம்பியின் காதல் மனைவிக்கும் பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே ஜக்ரியாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு இளம் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இருவரும் பலமாதங்கள் நெருக்கமாக இருந்துள்ளனர். திடீரென்று ஜக்ரியா இந்த பெண்ணுடன் சேர்ந்து தலைமறைவாகியுள்ளார். இதனையறிந்த அவருடைய மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரும், சிராஜுநிஷாவும் தனித்தனியே காவல் நிலையத்தில் ஜக்ரியாவை காணவில்லையென்று புகாரளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் புகாரை காவல் துறை ஆய்வாளரான ராமர் என்பவர் விசாரித்து வந்தார். வழக்குக்காக அவ்வப்போது சந்தித்த ஜக்ரியாவின் முதல் மனைவியும், ராமரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இவர்களுடைய நெருக்கத்தை உணர்ந்த சிராஜுநிஷா அவர்களை கையும் களவுமாக பிடிக்க முயற்சி செய்து வந்தார். சென்ற சனிக்கிழமை நள்ளிரவில் ராமருடைய இருசக்கர வாகனம் அந்த பெண்ணின் வீட்டு வாசலிலிருப்பதை சிராஜு நிஷா கண்டுபிடித்துள்ளார்.

உடனடியாக அவர், வீட்டை இருபக்கமும் பூட்டியுள்ளார். பின்னர், உறவினர்களை அழைத்து வந்து கையும் களவுமாக இருவரையும் பிடித்து கொடுத்துள்ளார். தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் ராமரை ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளார்.

இந்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.