முன்னழகை எடுப்பாக்க மார்பகத்தில் அறுவை சிகிச்சை..! 18 வயது இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! அதிர்ச்சி சம்பவம்!

மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் தற்போது கோமாவிலிருக்கும் பரிதாபமானது அமெரிக்காவில் நேர்ந்துள்ளது.


அமெரிக்காவில் கொலராடோ என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திற்குட்பட்ட தான்டர்ன் எனும் நகரை சேர்ந்தவர் எமலின். எமலினின் வயது 18. இந்த கோடையில் தான் அவர் தன்னுடைய உயர்நிலை பட்டத்தை முடித்தார். 

இதனிடையே தமக்கு நம்பிக்கையை அதிகரித்து கொள்வதற்கும், அழகை மேம்படுத்திக்கொள்வதற்கும் இவர் மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று தெரியவந்துள்ளது.

இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டதற்கு பிறகு எமலின்னால் வழக்கம்போல செயலாற்ற இயலவில்லை. அவரால் சரியாக பேசக்கூட இயலவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர்.

தங்களுக்கு தெரிந்த வகையில் அவர்கள் விசாரித்தபோது, இது ஒருவகையான கோமா தாக்குதல் என்று கண்டுபிடித்தனர். தன்னுடைய மகளின் இந்த பரிதாப நிலைக்கு மருத்துவமனை தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய பெற்றோர், அப்பகுதி நீதிமன்றத்தில் மருத்துவர் மற்றும் செவிலியரின் எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அவருடைய பெற்றோரிடம் கேட்டறிந்த போது, "இது என்ன மர்மம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய பணிகளை மருத்துவர்கள் சரியாக செய்கின்றனவா என்பதை அறிய விரும்புகிறோம். ஏனென்றால் அவற்றை மேற்கொண்டபோது, எமலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சுவாசத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கும். அதற்கு சரியாக தீர்வு காணாமல் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டதாக வியூகிக்கின்றோம்" என்றும் அவர்கள் உள்ளூர் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது அமெரிக்காவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.