காதலனுக்காக பெற்ற அம்மாவையே..! இளம் பெண் செய்த கொடூர காரியம்!

சொத்திற்காகவும், காதலுக்காகவும் சொந்த தாயையே மகள் கொலை செய்து இருக்கும் சம்பவம் தாய்லாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக். பேங்காகிற்கு உட்பட்ட பியூங்கும் மாவட்டத்தை சேர்ந்தவர் காஞ்சனா. இவருடைய வயது 25. இவர் தாயாரின் வயது 55. காஞ்சனா சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காஞ்சனாவின் கணவர் போதை மருந்து வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

அவரை வழக்கில் இருந்து மீட்டெடுப்பதற்கு காஞ்சனாவுக்கு அதிக அளவில் பணம் தேவைப்பட்டது. ஆனால் அவரிடம் அவ்வளவு பணமில்லை. அப்போது தன்னுடைய தாயார் பாலிசி எடுத்திருந்த நிகழ்ச்சி அவருக்கு ஞாபகம் வந்தது.

தன் தாயாரை கொலை செய்துவிட்டால் பாலிசியின் பெரும்பான்மை பணம் தன்னிடம் வந்து விடும் என்றும், அந்த பணத்தை உபயோகித்து தன்னுடைய கணவனை பெயிலில் வெளியே எடுக்க முடியும் என்றும் எண்ணினார்.

சிலரை கூட்டாக சேர்த்து கொண்டு தன் தாயாரை கொலை செய்ய காஞ்சனா திட்டமிட்டுள்ளார். காஞ்சனாவின் தாய்க்கு 10 மில்லியன் மதிப்பிலான சொத்திருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை காஞ்சனா தன்னுடைய தாயை கொலை செய்ய முயற்சித்து இருப்பதாக அவருடைய பாட்டி கூறியுள்ளார்.

ஜூன் மாதம் 22-ஆம் தேதியன்று, காஞ்சனாவின் தாயார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் அவரை சுட்டு தள்ளினர். மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டார். 2 மாதங்களாக மெல்ல மெல்ல உடல் நலம் தேறி வந்து கொண்டிருக்கிறார். துப்பாக்கி சூடு பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேற்கூறிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.