குழந்தை பெற்றெடுத்த அடுத்த சில மணிநேரங்களில் என் கணவனே என்னை ரேப் செய்தான்..! இளம் தாயார் வெளியிட்ட மனதை நொறுக்கும் சம்பவம்!

ஊரடங்கு காலத்தில் கணவன்மார்களால் பாதிக்கப்படும் பெண்களை காப்பாற்றுவதற்காக பிரிட்டன் நாட்டில் பெண் ஒருவர் உதவி செய்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் நட்டாஷா சாண்டர்ஸ். இவருடைய வயது 31. இவர் 17 வயதில் ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த ஆண் மூலம் இவர் கடந்த 8 ஆண்டுகளாக மிகுதியான சித்திரவதைகளை அனுபவித்து வந்துள்ளார். அவர் கூறுகையில், "என்னுடைய திருமண வாழ்க்கையின் தொடக்கத்தில் நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டேன். திருமண வாழ்வின் ஆரம்பத்தில் நான் கனவுகளோடு வாழ தொடங்கினேன்.

ஆனால் அவை அனைத்தும் கணவன் என்ற அரக்கனால் அழிக்கப்பட்டன. வேலைக்கு செல்வதற்கு தடை போட்டான். என்னை பலமுறை பலாத்காரம் செய்துவிட்டு மறுநாள் ஒன்றும் அறியாதது போன்று சகஜமாக பழகுவான். என்னுடைய குழந்தையை பெற்றெடுத்த சில மணி நேரத்திலேயே என்னை வெறியுடன் பலாத்காரம் செய்தான். நான் தடுக்க முயற்சித்த போது பிறந்து ஒரு மணி நேரமே ஆன குழந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டினான். இதேபோன்று கூற முடியாத கொடுமைகளை 8 ஆண்டுகளாக தொடர்ந்து சந்தித்து வந்தேன்.

பின்னர் ஒருமுறை தைரியத்தை வரவழைத்து அகதிகள் துஷ்பிரயோக உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்தேன். மறுமுனையில் பேசிய பெண் நான் தனியாக இல்லை என்றும் ஆதரவுடன் கணவரை பிரிந்து வெளியே வரலாம் என்றும் அறிவுரை கூறினார். அதன்படி காவல் நிலையத்தில் என்னுடைய கணவருக்கு எதிராக புகார் அளித்தேன்.

காவல்துறையினர் புகாரை நன்கு விசாரித்த பிறகு என்னுடைய கணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன் பிறகு நான் பென் என்பவரை காதலித்து திருமணம் புரிந்து ஒரு அழகான ஆண் குழந்தையுடன் வசித்து வருகிறேன்.

என்னைப் போன்று இந்த ஊரடங்கு காலத்தில் கணவன்மார்களால் கொடுமைப்படுத்தப்படும் பெண்களை காப்பாற்றுவதற்காக தான் இந்த செய்தியை வெளியிட்டுள்ளேன். அவர்கள் நினைத்தால் நிச்சயமாக இதிலிருந்து விடுபட்டு விடலாம். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுபோன்ற வன்கொடுமைகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த பெண்ணின் முயற்சியானது வெளியே கூற இயலாத பல பெண்களின் அவல நிலையை போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.