40 வயது பெண்ணொருவரை இளைஞர் ஒருவர் உடலில் 31 இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் வெளிநாட்டில்! வீட்டுக்குள் 30 வயது இளைஞனை அனுமதித்த 40 வயது மனைவிக்கு 31 இடங்களில் கத்தி குத்து! அதிர்ச்சி காரணம்!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_15978_1_medium_thumb.jpg)
கேரளா மாநிலத்தில் கொல்லம் என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட அஞ்சுமுக்கு என்னும் பகுதியில் ஷெரிஃப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகளின் பெயர் ஷைலா. ஷைலாவின் வயது 40. ஷைலாவின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே ஷைலாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அனீஷ் என்ற லாரி ஓட்டுநருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர். இந்த கள்ளக்காதலை உறவினர்கள் கண்டித்த போதும் ஷைலா தொடர்ந்து அனீஷுடன் நெருங்கிப்பழகி வந்துள்ளார்.
இதனையறிந்த ஷெரீஃப் கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை விவாகரத்து செய்வதற்கு முடிவெடுத்தார். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்த ஷைலா தன்னுடைய கள்ளக்காதலை முறித்துக்கொண்டார்.
அனீஷ் எவ்வளவோ முறை செல்போனில் ஷைலாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் ஷைலா தனது முடிவில் மிகவும் உறுதியாக இருந்துள்ளார். இதனால் அனீஷ் ஷைலா மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று பள்ளியிலிருந்து குழந்தைகளை ஷைலா அழைத்து வந்தபோது, அனீஷ் அவர்களை வழிமறித்துள்ளார். மறைத்து வைத்திருந்த கத்தியால் உடலில் 31 இடங்களில் ஷைலாவை குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஷைலாவை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஷைலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடனடியாக காவல்துறையினர் திறம்பட செயல்பட்டு தலைமறைவாக இருந்த அனீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவமானது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.