ஸ்கூட்டரை லாவகமாக அபேஸ் செய்த திருடி! பொண்ணுங்களே இப்படி மாறிட்டாங்களேப்பா.

கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சுடிதாரணிந்த பெண் திருடி சென்ற சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் உள்ள ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகூர் மீரான். இவருடைய வயது 65. அவருடைய உறவினர்கள் சிலர் பூந்தமல்லியை அடுத்துள்ள குமணன்சாவடியில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை பார்ப்பதற்காக மீரான் அங்கு சென்றுள்ளார். 

அப்போது உறவினர்களின் கடை வாசலில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். தவறுதலாக வாகனத்தின் சாவியை அப்படியே விட்டு சென்றுள்ளார். சந்திப்பு முடிந்தவுடன் வெளியே வந்து பார்த்த உடன் தன்னுடைய இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அக்கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்து கொண்டிருந்த பெண்ணொருவர் இவருடைய இருசக்கர வாகனத்தை எடுத்துச்செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த சிசிடிவி கேமரா பதிவினை ஆதாரமாக கொண்டு நாகூர் மீரான் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், பெண் ஹெல்மெட் அணிந்திருந்ததால் கண்டுபிடிப்பது சற்று கடினமாக உள்ளதாக கூறியுள்ளனர். எனினும்  அந்தப் பெண் சென்று உள்ள இடங்களை பெற கேமரா பதிவுகளின் மூலம் கண்டுபிடிக்கும் காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.

இந்த சம்பவமானது கரையான் சாவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.