தாய் வீட்டில் சடலமாக தொங்கிய பெண்! 5 வயது மகளும மர்ம மரணம்! மாமனுக்கு தலையில் காயம்! கோவை பயங்கரம்!

பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் ஒண்டிப்புதூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட  ஸ்ரீ காமாட்சி நகர் என்னுமிடத்தில் வேதவள்ளி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த போது திடீரென்று அங்கேயே இறந்துவிட்டார்.

 தன்னுடைய 5 வயது மகளான கார்குழலி மற்றும் அவரது பெற்றோருடன் தங்கி வந்தார். திடீரென்று நேற்று நள்ளிரவு குடும்பத்தினர் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு வெளியே ஓடி வந்த வேதவள்ளி என்னுடைய குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று எதிர்வீட்டில் கேட்டுள்ளார்.

கால் டாக்ஸியில் தன்னுடைய குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். வேதவள்ளியின் தம்பியின் தலையில் மாதவனுக்கு இரத்தம் வழிந்து வெளியே வந்துள்ளதை  அக்கம்பக்கத்தினர் கண்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலையில் நெடுநேரமாகியும் வேதவள்ளியின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. 

இதனால் அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது வேதவல்லி தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரத்த கரைகள் தொலைக்காட்சி பெட்டியில் படிந்திருந்தது. உடனடியாக காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை அழைத்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேதவள்ளியின் குழந்தையும் இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வைத்து தொடர்ந்து வேதவள்ளியின் தந்தை மற்றும் சகோதரரிடம் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.