காஷ்மீரில் ஹண்ட்வாரா என்கவுண்டரில் கொல்லப்பட்ட கர்னல் அசுதோஷ் ஷர்மாவின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டு நல்ல முறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது
நாட்டுக்காக உயிர் தியாகம்..! முட்டிக் கொண்டு வந்த கண்ணீர்..! அடக்கிக் கொண்டு ராணுவ வீரனுக்கு மனைவி, மகள் அடித்த ரெட் சல்யூட்..!
கடந்த சில தினங்களுக்கு முன்பாக வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஹந்த்வாரா சங்கிமுல்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் தங்களுடைய தாக்குதலை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து நம்முடைய வீரர்களும் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர்கள் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேசமயம் கர்னல், மேஜர், 2 ராணுவ வீரர்கள், போலீசார் உட்பட 5 பேர் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த கர்ணல் அசுதோஷ் ஷர்மாவின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு அவருடைய உடல் நல்ல முறையில் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் போது வீர மரணம் அடைந்த அசுதோஷ் ஷர்மாவின் உடலுக்கு அவரது மனைவி மகள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் தங்கள் அழுகையை அடக்கிக்கொண்டு சல்யூட் செய்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோ பதிவில் கர்னலின் மனைவி பல்லவி சர்மாவும் (வெள்ளை குர்தாவில்) அவர்களது இளம் மகள் தமன்னாவும் அழுதுகொண்டே அசுதோஷ் ஷர்மாவின் உடலுக்கு மரியாதை செலுத்தியதை நம்மால் காண இயலும். உயிரிழந்த அதிகாரிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட், துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் பாஜக எம்.பி. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஹண்ட்வாரா என்கவுண்டரில் ஈடுபட்ட ராஷ்டிரிய ரைபிள்ஸின் கட்டளை அதிகாரியாக கர்னல் அசுதோஷ் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முன்மாதிரியான துணிச்சலைக் காட்டியதற்காக அவருக்கு இரண்டு முறை பதக்கங்கள் கௌரவிக்கப்பட்டது.
இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இவர்களின் வீர மரணங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, இவர்களின் தியாகத்தையும் துணிச்சலையும் நாடு ஒருபோதும் மறக்காது என்று கூறியுள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.