தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
கொரோனாவில் தள்ளாடும் டெல்லி… மீண்டும் ஊரடங்கு தொடருமா..? முதல்வர் எடப்பாடியார் தீவிர ஆலோசனை
அப்போது, 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கண்டறியப்பட்டவுடன் மாண்புமிகு அம்மாவின் அரசால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முன்னெச்சரிக்கையாக மருந்துகள் கொள்முதல் செய்ய பணி ஆணையும், மருத்துவ உபகரணங்களான என்95 முகக்கவசங்கள், மூன்று மடிப்பு முகக்கவசங்கள், ஞஞநு முழு உடல் கவசங்கள் போன்றவை வாங்குவதற்கு பணி ஆணையும் வழங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.
அதோடு, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய 12 ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கென்று பணிகள் வழங்கப்பட்டு, அந்தக் குழுக்களில் இடம்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிறப்பான முறையில் பணியாற்றிய காரணத்தினால் தான் இன்றைக்கு தமிழகத்தில் வளர்ச்சி குன்றாமல் தேசிய அளவில் நாம் முதன்மையாக விளங்கிக் கொண்டிருக்கிறோம். அதோடு, கொரோனா வைரஸ் பரவல் குறைவதற்கும் அவர்கள் உதவிகரமாக இருந்தார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா வைரஸ் தடுப்புப் பணி குறித்தும், மாண்புமிகு அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்குவதற்கு எனது தலைமையில், 12 முறை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆய்வுக் கூட்டங்கள் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றன.
அதேபோல, 10 முறை மருத்துவ வல்லுநர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தலைமைச் செயலாளர் அவர்களுடைய தலைமையில் 13 முறை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடைய ஆலோசனைக் கூட்டங்கள் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இவ்வாறு ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்ற ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து, மாவட்ட நிர்வாகமும் அதனை பின்பற்றியதன் காரணமாக, கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
அதேபோல, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களை அரசு கவனமாக பரிசீலித்து, பொது தளர்வுகளுடன் முடக்கம் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை 5,22,530 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 2,79,36,147 நபர்கள் கலந்துகொண்டு பயனடைந்திருக்கிறார்கள். இதில், 11,46,363 நபர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. இவ்வாறு, காய்ச்சல் முகாம்கள் நடத்தியதன் விளைவாக வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிய முடிந்தது. அத்துடன், விளம்பர கையேடுகள் மூலம் இரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரக பாதிப்பு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி, வீடு, வீடாகக் கொண்டு சேர்க்கப்பட்டதன் விளைவாகவும் இந்நோய்ப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மூலம் வீடு, வீடாகச் சென்று மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் அரசு பார்த்துக் கொண்டது.
மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளிலும், கோவிட் சிறப்பு மையங்களிலும் 1,41,527 படுக்கைகளும், இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 34,714 படுக்கைகளும், ஐஊரு வசதி கொண்ட 7,697 படுக்கைகளும், 6,517 வென்டிலேட்டர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.
தற்போது மகாராஷ்டிரம், டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் வேளையில், தமிழகத்தில் மட்டும்தான் குறைந்துகொண்டே வருகிறது. ஆகவே, இதனை தக்கவைக்கும் வகையில், டிசம்பர் மாதம் எத்தகைய தளர்வுகளை அனுமதிப்பது என்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.