என் மகள் நடுரோட்டில் துடிதுடித்து இறந்த போது அங்கு என்ன நடந்தது தெரியுமா? சுபஸ்ரீ தாயார் வெளியிட்ட நெஞ்சை உலுக்கும் தகவல்!

சுபஸ்ரீ சாலையில் துடித்து கொண்டிருந்தபோது நிகழ்ந்த சம்பவங்களை அவருடைய பெற்றோர் பகிர்ந்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சென்னையில் ரேடியன் சாலையில் அமைந்துள்ள மண்டபத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் இல்லத்திருமண விழா நடைபெற்றது. இதற்காக சாலை முழுவதும் பேனர்கள், போஸ்டர்கள் பிரம்மாண்டமாக அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தன. இங்கு இருசக்கர வாகனத்தில் பி.டெக் படிக்கும் சுபஸ்ரீ என்ற மாணவி சென்று கொண்டிருந்தார்.

சாலையோரத்தில் அமைந்திருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் சுபஸ்ரீ நிலைதடுமாறி நடுரோட்டில் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது. 

இதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிகழ்வு  தமிழ்நாட்டில் உள்ள பலரையும் சில நாட்களாக பெரிதளவில் பாதித்துள்ளது. இந்நிலையில் தங்கள் மகள் மரணத்தின்போது நேர்ந்தவற்றை சுபஸ்ரீயின் பெற்றோர் பகிர்ந்து கொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சுபஸ்ரீயின் தந்தை கூறுகையில், "எங்களைப் போன்று வேறு எவரும் பிள்ளைகளை இழந்துவிட வேண்டாம். பேனர் இல்லாமல் இருந்திருந்தால் எங்கள் மகள் இன்று உயிருடன் இருந்திருப்பாரே என்ற எண்ணம் வருகிறது. அதிமுகவுக்கு முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

அதைவிடுத்து பேனர்கள் அடித்த கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற முறைகள் ஈடாகாது" என்று அவருடைய தந்தை கூறினார். "இனிமேல் பேனர்கள் வைக்கப்பட்டால் நானே பிளேடால் கிழிப்பேன் "என்று சுபஸ்ரீயின் தாயார் ஆவேசமடைந்தார்.

சுபஸ்ரீயின் உற்றார் உறவினர்கள் அனைவரும் வேண்டுவது ஒன்றே. சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான அனைவரையும் சட்டத்தின்முன் தண்டிக்க வேண்டும். அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்று பாராமல் அனைவருக்கும் உரிய தண்டனையை அளிக்க வேண்டும் என்பதே ஆகும்.

அவ்வாறு நடந்தால் தான் அவருடைய ஆன்மாவிற்கு சாந்தி கிடைக்கும்.