அயோத்தி ராமருக்கு தங்கத்திலான செங்கல்..! மொகலாய இளவரசர் அறிவிப்புக்கு எழும் கடும் எதிர்ப்புகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் தங்க செங்கல் வழங்குவதாக முகலாய பேரரசின் வம்சாவழி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முகலாய பேரரசின் வழித்தோன்றல் யாகூப் ஹபீபுதீன் டூசி. இவர் ஷாஜஹானின் வழிப்பேரன் ஆவார். இவர் தற்போது முகலாயப் பேரரசின் இளவரசர்.

இவர் என்.ஐ.ஏ ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியானது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது,  "அயோத்தியில் இரு மதத்தினருக்கும் இடையேயான சர்ச்சைக்குரிய நிலம் வக்ஃபு வாரியம் உரிமையாளர் இல்லை.

இரு மதத்தினரையும் மதிக்கும் வகையில் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டால் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு தங்கத்தினாலான செங்கலை தருவதற்கு தயாராக உள்ளேன்" என்று கூறினார்.

இந்தப் பேட்டியானது இஸ்லாமிய மதத்தினர் இடையே கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.