பைனலுக்கு முன்னேறுமா CSK? டெல்லி அணியை சம்பவம் செய்ய மாஸ்டர் பிளான் போடும் தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான இடையேயான குவாலிபயர் 2 பிலே ஆஃப் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.


இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதி போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.  சென்னை அணி கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதி தோல்வி அடைந்ததால், இந்த போட்டியில் வென்றால் மட்டுமே  இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். சென்னை அணியில் தோனியை  தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் பார்மில் இல்லை. சுரேஷ் ரெய்னா, ராயுடு, டு பிளெஸ்ஸிஸ்,  வாட்சன் ஆகிய அனைவரும் பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர். கடைசி போட்டியில் 2 கேட்ச்களை பிடிக்க தவறியதால் சென்னை அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆகையால் சென்னை அணி பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி பிலே  ஆஃப் இல் சன் ரைசர்ஸ் அணியை வீட்டுக்கு அனுப்பி குவாலிபயர் 2 போட்டிக்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆகையால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் தங்களது முழு பலத்துடன் களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.