ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மக்கள் நீதிமன்றத் தலைவர் கமல்ஹாசன்.
ரஜினியின் ஆதரவு கமல்ஹாசனுக்குக் கிடைக்குமா..? ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு உடனடி பதவி.

விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். உடனடியாக, அவர் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 25 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய ஆட்சிப் பணியாற்றிய சந்தோஷ் பாபு, கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென தனது பதவியிலிருந்து விருப்ப ஓய்வுப் பெற்றார்.
சந்தோஷ் பாபு நிர்வாக இயக்குநராக இருந்த தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனுக்கான ஒப்பந்த புள்ளிக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்ட மாற்றுக்கருத்தின் காரணமாக அவர் சுமார் எட்டாண்டுகள் பணி உள்ள நிலையிலும், விருப்ப ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ‘வரும் தேர்தலில் அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா?, ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும்,” எனத் தெரிவித்தார்.
கமல் கேட்பது சரிதான். ரஜினி ஆதரவு கொடுப்பாரா என்பதில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது.