நான் கன்னி கழியாத பொன்னு..! நம்பி திருமணம் செய்த இளைஞனுக்கு தெரிய வந்த மனைவியின் ரகசியம்!

கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளம்பெண்ணின் கள்ளக்காதலன் குழந்தையை கொலை செய்துள்ள சம்பவமானது திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள இதயம் நகர் என்ற இடத்தில் சக்திவேல் என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருடைய வயது 21. இவர் லாவண்யா என்ற பெண்ணை 3 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பெரியவர்களின் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு சவினா என்ற 2 வயது குழந்தையும் உள்ளது.

இதற்கிடையே தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று சமீபகாலத்தில் லாவண்யா சக்திவேலிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சக்திவேல் தன் தாய் மட்டும் இருப்பதால் தனிக்குடித்தனம் வர இயலாது என்று மறுத்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் 8 மாதங்களுக்கு முன்னர், லாவண்யா குழந்தையை தூக்கி கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் லாவண்யாவுக்கு தேவரிஷி குப்பத்தில் பிரவீன் குமார் என்ற 22 வயது இளைஞருடன் திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது.  அப்போதிலிருந்து குழந்தையை தன்னுடன் அழைத்து செல்வதற்காக சக்திவேல் மிகவும் போராடியுள்ளார். ஆனால் லாவண்யா குழந்தையை திருப்பி தர ஒப்புக்கொள்ளவில்லை. குழந்தை லாவண்யாவின் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளது. லாவண்யா ஏற்கனவே திருமணமானவர் என்பது பிரவீன் குமாருக்கு தெரியாது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர், இரவு நேரத்தில் லாவண்யா மற்றும் அவரது தாயார் சாந்தி இருவரும் வாகனத்தில் ஜோலார்பேட்டை அருகே வந்து குழந்தை இறந்துவிட்டதாக கூறி குழந்தையை கொடுத்துள்ளனர். மிரண்டுபோன சக்திவேல் மற்றும் அவரது உறவினர்கள் குழந்தையின் உடலை பார்த்த போது பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டது போன்று தோற்றமளித்துள்ளது. 

உடனடியாக சக்திவேல் நிகழ்ந்தவற்றை கூறி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மனைவி மீது புகார் அளித்தார். குழந்தையை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது, பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாயின.

அதாவது சத்துவாச்சாரியில் தாயாரின் அரவணைப்பில் இருந்த குழந்தையை பிரிந்து லாவண்யாவால் இருக்க இயலவில்லை. இதனால் தன்னுடைய குழந்தையை அழைத்துக்கொண்டு தேவரிஷி குப்பத்திற்கு லாவண்யா வந்துள்ளார். அப்போதுதான் பிரவீன் குமாருக்கு லாவண்யா ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவர் லாவண்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது லாவண்யாவை கையிலிருந்த குழந்தையை தரையில் அடித்து பிரவீன் குமார் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். குழந்தையின் பின்பக்கத்தில் அடிபட்டதால் மயங்கி விழுந்துள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக நிகழ்ந்ததை மறைப்பதற்கு குழந்தையின் தந்தையான சக்திவேல் இடம் லாவண்யா குழந்தை இறந்துவிட்டதாக ஒப்படைத்துள்ளார் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.