நைட் வீட்டுக்கு வர்றதே இல்ல..! அதான்..! கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்டுத் தள்ளிய மனைவி பகீர் வாக்குமூலம்!

ஜோலார்பேட்டையில் மது குடித்துவிட்டு கணவர் வீட்டுக்கு வராமல் இருந்தமையால் கள்ளக்காதலனுடன் இணைந்து சண்டை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் சின்ன மூக்கனூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் குடிநீர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருபவர் ரமேஷ் குமார். ரமேஷ்குமார் கடந்த நான்காம் தேதியன்று தாமலேரிமுத்தூர்  பகுதியில் அமைந்திருக்கும் டாஸ்மாக்கின் பின்புறத்தில் தலையில் பலத்த காயங்களுடன் மோசமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொலைக்கான காரணங்கள் என்ன எனவும் கொலை செய்தது யார் எனவும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். ரமேஷ் குமாரின் மனைவி நித்யா இடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாரிடம் நித்யா முன்னுக்கு பின்னாக முரணாகவும் பல பதில்களை தெரிவித்திருக்கிறார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நித்யாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாருக்கும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அப்படியாக விசாரிக்கும் பொழுது வீட்டில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு நடந்த உண்மையைப் பற்றி போலீசாரிடம் கூறி இருக்கிறார்.

அதாவது நித்யாவின் உடன்பிறந்தவர் அரவிந்தன். ரமேஷ் குமார் தீவிர குடிப்பழக்கத்துக்கு ஆளானதாக்க கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பாக ரமேஷ்குமார் குடிபோதையில் அரவிந்தின் மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறார் . இதனால் அரவிந்த்தன், ரமேஷ் குமார் மீது மிகுந்த கோபத்தில் இருந்திருக்கிறார்.

இந்த சம்பவத்தையடுத்து நித்யாவிற்கு அவரது கணவர் மீது இருந்த வெறுப்பு உண்டாகி இருக்கிறது. இதே சமயத்தில் நித்யா மற்றும் அவரது கணவர் ரமேஷ்குமார் கட்டிடம் தொழில் செய்துவரும் கணபதி உடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளனர். நாளடைவில் கணபதிக்கும் நித்யாவிற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. 

குடிப்பழக்கத்தில் அடிமையாகி உள்ள தன்னுடைய கணவரை கொலை செய்வதற்காக நித்தியா அரவிந்தன் மற்றும் கணபதி ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார். ஆகையால் நித்யா, அவர் மது அருந்தும் போது அந்த மதுவில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறார். இதனால் ரமேஷ்குமார் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் பின்னர் மருத்துவர்கள் அவருக்கு தகுந்த சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றியுள்ளனர்.

விஷம் கொடுத்தும் ரமேஷ்குமார் இறக்கவில்லை என்று மீண்டும் தன்னுடைய தம்பி மற்றும் கணபதி ஆகியோருடன் இணைந்து புதிய திட்டத்தை தீட்டி இருக்கிறார். அப்போது கணபதி குடிப்பதற்காக தாமலேரிமுத்தூர் பகுதியில் அமைந்திருக்கும் டாஸ்மாக்கிற்கு அழைத்துள்ளனர். தன் நண்பன் தானே அழைக்கிறார் என ரமேஷ்குமார் அந்த இடத்திற்கு சென்று இருக்கிறார்.

அப்போது கணபதி ரமேஷ்குமார் குடித்துக்கொண்டிருந்த மதுவில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறார் . ஒன்றும் ஆகவில்லை என்பதால் அருகில் இருந்த கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார். கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் நடைபெறும்போது அரவிந்தன் மறையுது நின்று நடப்பதை வேடிக்கை பார்த்திருக்கிறார்.

ஆகமொத்தம் கணபதி, நித்யா மற்றும் அரவிந்தன் ஆகிய மூவரும் இணைந்து இந்த திட்டத்தை தீட்டி வெற்றிகரமாக கொலை செய்துள்ளனர். இந்த தகவலை நித்தியா போலீஸ் விசாரணையில் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.