திருமணமான சில மாதங்களில் மாயமான கணவன்! வேறு ஒருவனுடன் புது வாழ்வை தொடங்கிய மனைவி! 8 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமான பகீர் உண்மை!

கணவனை கொலை செய்த மனைவி!! கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக எடுக்கப்பட்ட விபரீத முடிவு!!! புது டெல்லியில் பரபரப்பு!!!


புதுடெல்லியில் ஜெய் பகவான் என்பவர் வசித்து வந்தார். அவருடைய மகனின் பெயர் ரவி. 2011-ஆம் ஆண்டு ரவிக்கும் அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே ரவி காணாமல் போனார். மிகவும் மனமுடைந்த ஜெய் பகவான் அப்பகுதியை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினரின் விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்காததால் ஜெய் பகவான் உயர்நீதிமன்றத்திற்கு சென்றார்.

நீதிபதிகள் இந்த வழக்கை குற்றப்பிரிவு வழக்காக மாற்றி அமைத்தனர். இதனிடையே சகுந்தலாவுக்கு 2012-ஆம் ஆண்டில் கமல் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவருடைய விருப்பத்திற்கு மாறாகவே அவருக்கு ரவிவுடன் திருமணம் நடந்திருக்கிறது என்பதை காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்தனர்.

கமலுடன் கண்டிப்பாக வாழ்ந்து விட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தார் சகுந்தலா ரவியை கொலை செய்வதற்கு திட்டமிட்டார். அதன்படி சம்பவத்தன்று தன்னுடைய சகோதரியை பார்த்து வரவேண்டும் என்று ரவியிடம் கூறியுள்ளார். அப்போது சென்றபோது தான் ரவி மாயமானார்.

குற்றப்பிரிவு காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கமல் மற்றும் சகுந்தலாவுடன் விசாரணை நடத்தினர். அவர்களை உண்மையை கண்டறியும் சாதனத்திலும் சோதித்து பார்த்தனர். ஆனால் எந்த விளைவும் ஏற்படவில்லை. அதன் பின்னர் கமலுடன் காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் காவல்துறையினர் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

அதன் பின்னர் கமல் தலைமறைவானார். தலைமறைவான கமலை காவல்துறையினர் சிரமப்பட்டு கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கமல், சகுந்தலா மற்றும் கார் ஓட்டுநருக்கு கணேஷ் ஆகியோர் இணைந்து ரவியை கொன்றதாக ஒப்புக்கொண்டார். ரவியை காரில் சென்று கொண்டிருக்கும் போது கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.

மேலும், ரவியின் உடலை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். கமல் கூறிய இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ரவியின் எலும்புத் துண்டுகளை மீட்டெடுத்தனர்.

கமலை கைது செய்த காவல்துறையினர் தற்போது தலைமறைவாகியுள்ள சகுந்தலாவை தேடி வருகின்றனர்.இந்த சம்பவமானது புதுடெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சகுந்தலா தற்போது கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.