தகாத உறவு வேண்டாம்..! கெஞ்சிய மனைவியை கடித்துக்குதறிய கணவன்..! தஞ்சை அதிர்ச்சி!

தன்னுடைய கள்ளக்காதலுக்கு தடங்கலாக இருந்த மனைவியை கணவன் கடித்துள்ள சம்பவமானது தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு எனும் தாலுகா அமைந்துள்ளது. இதற்கருகே திருமங்கலக்கோட்டை கீழையூர் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு சுபாஷ் சந்திர போஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் மகாராணி. இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே கடந்த சில மாதங்களாக சுபாஷ் சந்திர போஸுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பானது கள்ளக்காதல் வரை சென்றுள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த மகாராணி சுபாஷ் சந்திர போஸை கண்டித்து வந்துள்ளார். ஆனால் சுபாஷ் சந்திரபோஸ் மனைவியின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே கடுமையான தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. கள்ளக்காதலை விட்டுவிடுமாறு மகாராணி சுபாஷ்சந்திரபோஸிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் சந்திரபோஸ் உருட்டுக்கட்டையால் மகாராணியின் மண்டையை உடைத்துள்ளார். சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மகாராணியை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சுபாஷ் சந்திர போஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.