இரவில் தனிமையில் தவிக்க விட்டுச் சென்ற கணவன்! மகளுடன் இளம் மனைவி எடுத்த கொடூர முடிவு!

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்த சம்பவமானது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரில் ஜோதி என்ற பெண் வசித்து வந்தார். இவருடைய வயது 28. இவர் அங்கு பெண் மாடலாக பணியாற்றி வந்தார். 10 வருடங்களுக்கு முன்னால் இவர் அதே பகுதியை சேர்ந்த பங்கஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஷபுனா என்ற 7 வயது மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த சில மாதங்களாகவே ஜோதிக்கும் பங்கஜுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தன. பங்கஜ் ஜோதியின் நடத்தையில் சந்தேகித்தார். இதனால் ஜோதி மிகவும் மனமுடைந்தார்.

சம்பவத்தின் முந்நாளிலும் இதேபோன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளன. வாக்குவாதங்கள் முற்றிப்போய் கைகலப்பு வரை சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பங்கஜ் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மறுநாள் காலையிலும் பங்கஜ் வீடு திரும்பவில்லை இதனால் அதிர்ச்சியுற்ற ஜோதி அவருடைய செல்போனுக்கு அழைத்துள்ளார். ஆனால் பங்கஜின் செல்போன் சுவிட்ச் ஃஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் மிகவும் மனம் நொந்த ஜோதி தன் மகளான ஷபுணாவுடன் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவத்தை கண்டால் காவலாளி அதிர்ச்சியுற்று அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.