நான் போகாத இடத்தையும் டைம்லைனில் காட்டும் கூகுள் மேப்..! மனைவி சந்தேகப்படுகிறாள்..! மயிலாடுதுறை நபருக்கு கூகுளால் நேர்ந்த பரிதாபம்!

கூகுள் மேப்பினால் ஒரு குடும்பத்தில் பிரளயமே வெடித்துள்ள சம்பவமானது மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறையில் லால்பகதூர் நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சந்திரசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் எங்கெல்லாம் சென்றுவிட்டு வந்தார் என்பதை கண்டறிவதற்காக சந்திரசேகரனின் மனைவி கூகுள் மேப்பை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் வழக்கம்போல நேற்று முன்தினமும் சந்திரசேகரனின் மொபைல் போனில் உள்ள கூகுள் மேப்பை ஆய்வு செய்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது சந்திரசேகரன் செல்லாத இடங்களை எல்லாம் கூகுள் மேப் சென்று வந்ததாக காட்டியுள்ளது.

இதனால் கணவன் மனைவி இருவரும் கடுமையான தகராறில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி குடும்பத்தினரிடையே இந்த பிரச்சனை பூகம்பமாக வெடித்தது. மேலும் சந்திரசேகரின் மனைவி கணவரை நம்பாமல் தொடர்ந்து கூகுள் மேப்பை நம்பி வந்துள்ளார். இதனால் இரவு நேரத்தில் தூக்கமின்றி உடல்நிலையை வெகுவாக எடுத்து கொண்டுள்ளார்.

குடும்பத்தினர் அவரை பல்வேறு மனநல ஆலோசகர்களிடம் அழைத்து சென்ற போதிலும் எந்தவித பயனுமில்லை. தாலி கட்டிய கணவரை நம்பாமல் தொடர்ந்து அவர் கூகுள் மேப்பை நம்பி வந்தது, அவருடைய வாழ்க்கையில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சந்திரசேகரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி தான் செல்லாத இடங்களுக்கு எல்லாம் சென்றதாக காட்டிய கூகுள் மேப்பின் பதிவுகளை இணைத்து கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி தனக்கு ஏற்பட்ட எடுப்பதற்காக நஷ்ட ஈடும் தரவேண்டும் என்று அவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். 

இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.