பூட்டிய வீட்டுக்குள் தொங்கிய 3 சடலங்கள்! தாய் - 2 மகன்களுக்கு நேர்ந்த விபரீதம்! நெஞ்சை பதை பதைக்க வைத்த சம்பவம்!

கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்து வந்த தொடர் துன்புறுத்தலால் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்ட்ராவில் வசித்துவரும் சிதா மற்றும் ராஜு இருவரும் 7 வருடங்களுக்கு முன்னால் திருமணம் செய்துகொண்டனர் . இவர்கள் இருவருக்கும் ஐந்து வயதில் ருத்ரா என்ற குழந்தையும் ,4 வயதில் லஸ் என்ற ஒரு குழந்தையும் உள்ளது .

திருமணம் நடந்ததில் இருந்தே கணவன் மனைவியான ராஜு மற்றும் சீதாவிற்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டது . அதோடு மட்டுமல்லாமல் அவரது கணவரும் குடும்பத்தினரும் சீதாவை கடுமையாக துன்புறுத்தி வந்துள்ளனர் . 

சீதாவின் கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரின் தொடர் துன்புறுத்தலால் சீதா தனது தாய் வீட்டிற்கு கோவித்துக்கொண்டு சென்றுவிட்டார். இந்நிலையில் தனது அம்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் , சீதா தனது இரண்டு குழந்தைகளையும் தூக்குப்போட்டு கொன்றுவிட்டு அவர்கள் இறந்த பிறகு சீதாவும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார் . 

மேலும் இந்த தற்கொலைக்கு காரணம் என் கணவரும் அவரது குடும்பத்தினரும் தான் என்று சீதா கடிதம் எழுதி வைத்துள்ளார்.இந்நிலையில்  சீதாவின் சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் . மேலும் சீதா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .