எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தியது ஏன்..? கொந்தளிக்கும் எம்.பி.க்கள்.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கருத்தில் கொண்டு, வருகிற 2020-21 மற்றும் 2021-22 ஆகிய நிதியாண்டுகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட தொகையை தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு, இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையான ரூ.7900 கோடி செலவுகளில் இருந்து கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

மேலும் பிரதமர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், தினப் படி மற்றும் ஓய்வூதியங்களை அடுத்த ஒரு வருடத்திற்கு 30 சதவீதம் வரை குறைக்கும் சட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிடிக்கப்படும் இந்த தொகை. கொரோனா வைரஸ் தாக்குதலை கண்காணிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக பயன்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாராளுமன்றம் லோக் சபா மற்றும் ராஜ்ய சபா என மொத்தம் 795 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. சராசரியாக ஒரு உறுப்பினருக்கு தினப் படி மற்றும் பாராளுமன்ற வருகைக்கு ஏற்ப. மாதம் 2 லட்சத்து 70 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. 

இதுமட்டுமின்றி போக்குவரத்து செலவு உணவு மற்றும் தொலைபேசி கட்டணங்கள் தனியாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 21 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக ஒதுக்கப்படுகிறது. 

இந்த தொகையை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கணக்கிட்டால் 100 கோடியை தாண்டுகிறது. தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த நிலையில். வெகுநாட்களாக செயல்படாத நிலையில் உள்ள பல தனியார் துறை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தற்காலிகமாக வேலையை விட்டு நிறுத்தி வருகின்றன. 

இதே நிலை நீடித்தால் நாட்டில் உள்ள அனைத்து தொழில் துறைகளும் முடங்கி. நாட்டு மக்கள் பொருளாதாரத்திற்கு எதிரான போரை சந்திக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சம்பளத்தில் 30% வரை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து. மாநில அரசுகளும் தங்களது சட்ட மன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைக்க உள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மணியன் கலியமூர்த்தி