தி.மு.க.வின் சீனியர் மற்றும் வாரிசு பட்டியல் வெளியிட ஐபேக்கிற்கு 350 கோடி எதற்காக..? கொதிக்கும் உ.பி.க்கள்

முதுமை அடைந்தவர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு எல்லாம் சீட் கிடையாது என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், அச்சுஅசலாக எப்போதும் வெளியிடுவது போலவே ஒரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.


‘இந்த பட்டியலை தயாரிக்கறதுக்கு எதுக்கு 350 கோடி கொடுத்து ஐபேக்கை ஒப்பந்தம் செய்யணும்? அறிவாலய வாட்ச்மேனிடம் கேட்டிருந்தால் அவரே தந்திருப்பாரே!’’ என்கிற கமெண்ட்தான் உ.பிக்கள் மத்தியில் இப்போது வைரலாக வலம் வருகிறது.

இதுகுறித்து உ..பிக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது; ‘’ ரொம்பவே பில்டப் கொடுத்து பட்டியல் வெளியிட்டபோது நிஜமாகவே மாற்றம் இருக்கும்ணு நம்பினோம். ஆனா எங்க நம்பிக்கை வீண்போயிடிச்சிது. தெற்கே சுரேஷ் ராஜனில் தொடங்கி ஆவுடையப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன், நேரு, பொன்முடி, எ.வ. வேலு, துரைமுருகன், தா.மோ அன்பரசன் –ணு ஊருக்கு ஊர் பழம் பெருச்சாளிகளையே போட்டிருக்காங்க. ஒழுங்கா நடக்க முடியாத சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கெல்லாம் சீட் கொடுத்திருக்கும் கொடுமையை எங்கே போய் சொல்றது!

மாறி மாறி இந்த மாதிரி ஆட்களுக்கே கொடுத்தால் மற்ற கட்சிக்காரங்களோட நிலை? மொத்தத்தில் திமுக வாரிசு கட்சிதாண்ணு அழுத்தமா சொல்லியிருக்குது இந்த வேட்பாளர் பட்டியல். அதிமுகவில் 3 அமைச்சர்கள் உட்பட சுமார் 35 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு கல்தா கொடுத்திருக்காங்களே. அந்த’ தில்’ இவங்களிடம் ஏன் இல்லை’’ இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பட்டியல் குறித்து ஐபேக் தரப்பில் விசாரித்தபோது,’’ நாங்கள் கொடுத்த பட்டியல் இதுவல்ல. கடைசி நேரத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன’’ என சிம்பிளாக முடித்துக் கொண்டனர். தி.மு.க.வின் குணத்தை மாத்தவே முடியாது என்பதுதான் நிஜம்.