ட்விட்டரில் இருந்து ரஜினி வீடியோ நீக்கம்..! ரிப்போர்ட் அடித்தவர்களுக்கு தலா ரூ.1000..! பின்னணியில் பிரபல அரசியல் கட்சி!

நடிகர் ரஜினியின் ட்விட்டர் வீடியோ திடீரென நீக்கப்பட்டதன் பின்னணியில் பிரபல அரசியல் கட்சியின் ஐடி விங்க் பின்னணியில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.


பிரபல கட்சியின் தலைவராக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பதவி ஏற்றவர் இவர். இவரை கிண்டல் செய்து யூட்யூப், பேஸ்புக்கில் பல்வேறு டிரோல் வீடியோக்கள் அப்போது வெளியாகி வந்தன. இந்த வீடியோக்களை ரிப்போர்ட் செய்து நீக்கவே தனியாக ஒரு டீம் களம் இறக்கப்பட்டது. அந்த டீமுக்கு ஒரு வீடியோவை அகற்றினால் 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இதற்காக பாட்ஸ் எனப்படும் போலி ட்விட்டர் கணக்குகளை அந்த டீம் பயன்படுத்தியது. இதனால் குறிப்பிட்ட அந்த தலைவருக்கு எதிரான டிரோல் வீடியோக்களை எதிலும் பதிவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அப்படியே பதிவேற்றினாலம் அந்த அரசியல் கட்சியின் ஐடி டீம் பாட்ஸ் மூலம் ரிப்போர்ட் செய்து வீடியோக்களை அகற்றியது.

இந்த நிலையில் தான் கடந்த மூன்று நாட்களக்கு முன்னர் அந்த அரசியல் கட்சி தலைவர் ட்விட்டரில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை வீடியோவை பதிவேற்றினார். ஆனால் அதற்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லை. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று கொரோனா முன்னெச்ரிக்கை வீடியோ ஒன்றை பதிவேற்றினார்.

அந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்தது. ரீட்வீட்ஸ்சும் குவிந்தன. ஆனால் திடீரென அந்த வீடியோ தங்கள் விதிகளுக்கு முரணானது என்று கூறி ட்விட்டர் நீக்கியது. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ட்விட்டர் இந்தியாவுக்கு எதிராக புகார்கள் குவிந்தன.

ட்விட்டர் இந்தியாவை திட்டி பதிவேற்றப்படும் ஹேஸ்டேக்குகள் டிரெண்டாகின. மேலும் ரஜினி வீடியோவை ட்விட்டர் நீக்கியதால் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியினர் கொண்டாடித் தீர்த்தனர். இதன் மூலம் தான் ரஜினி வீடியோ நீக்கத்தின் பின்னணியில் அந்த கட்சி இருப்பது தெரியவந்தது. விசாரித்த போது, ரஜினி வீடியோவை ரிப்போர்ட் அடித்தால் ஆளுக்கு 1000 ரூபாய் என தங்கள் தொடர்பில் உள்ளவர்களை உசுப்பேற்றி அந்த கட்சியின் ஐடி விங்க் வீடியோவை நீக்கியுள்ளது தெரியவந்துள்ளது.