நடிகை கவுதமியின் முதல் கணவரின் நிலை..! முதன் முதலாக வெளியான புகைப்படம்!

நடிகை கவுதமியின் முதல் கணவர் புகைப்படம் வெளியாகியுள்ள சம்பவமானது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


1980-களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. "வசந்தமே வருக" எனும் திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு,கன்னடம் ஆகிய பல திரையுலகங்களில் கொடிகட்டி பறந்தார். கமல்ஹாசன் ரஜினிகாந்த்,பிரபு போன்ற கதாநாயகர்களுடன் பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இவர் சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை அறவே நிறுத்திவிட்டார். இத்தம்பதியினருக்கு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.


மகளுடன் சென்னைக்கு வந்து மீண்டும் நடிக்க தொடங்கினார். ஆனால் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். அப்போதுதான் நடிகர் கமல்ஹாசனுடன் "லிவிங் டுகெதர் ரெலேஷன்ஷிப்" முறையில் வாழ தொடங்கினார்.

இவருடைய முதல் திருமண புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருமண மேடையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைகளில் இருந்து பரிசு பெறுவது போன்ற அரிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலாவருகிறது.