நந்தியை பிரதோஷ தினத்தில் ஏன் வழிபட வேண்டும் தெரியுமா? பிரதோஷ நாட்களுக்கான பலன்கள் இதோ

வாரத்தின் ஏழு நாட்களும், வருடத்தின் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களுமே, நந்தியைச் சென்று வழிபட்டு வருவதில் தவறில்லை.


ஆனால் சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ள, தடைகள் அகல வேண்டுமானால் பிரதோஷ நாளில் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். நந்தியெம் பெருமானையும், உமாமகேஸ்வரரையும் எந்தக் கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதமிருந்து வழிபட்டு வந்தால், மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.

திங்கட்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதமிருந்து வழிபட்டால், மனசஞ்சலங்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும். நல் எண்ணங்கள் உருவாகும்.

செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதமிருந்து வழிபட்டால் உணவுப் பற்றாக்குறை அகலும். உத்தியோக வாய்ப்பும், உதிரி வருமானங்களும் பெருகும்.

புதன்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதமிருந்து வழிபட்டால் புத்திர விருத்தியும், ஆண் சந்தான பாக்கியமும் கிடைக்கும்.

வியாழக்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதமிருந்து வழிபட்டால், படிப்பில் இருந்த தடை அகலும். கல்வி, ஞானம் பெருகும். மதி நுட்பத்தினால் மகத்துவம் காண்பீர்கள்.

வெள்ளிக்கிழமை அன்று வரும் பிரதோஷ விரதமிருந்து வழிபாட்டால் பகை விலகும். பாசம் கூடும்.

சனிக்கிழமை வரும் பிரதோஷ விரதமிருந்து வழிபாட்டினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

எல்லாப் பிரதோஷ நாட்களிலும் சென்று நந்தியை விரதமிருந்து வழிபாடு செய்தால், நல்ல வாழ்க்கை அமைய வழிகாட்டுவார்.