கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு மனநலம் பாதிப்பு எப்போது உண்டாகுமா?

உடல் நலம் சீராக இருப்பதுபோன்று மனநலமும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சிறப்பாக இருக்கவேண்டும் என்பதை பார்த்தோம். அப்போதுதான் தாயும் அவளுடைய வயிற்றில் வளரும் சிசுவும் ஆரோக்கியமாக இருக்கமுடியும். எப்படிப்பட்ட பெண்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை பார்க்கலாம்.


• ஏற்கெனவே மனநல பாதிப்பு உள்ளவர்களுக்கும், மனநல சிகிச்சை எடுத்து தற்போது நல்ல மனநிலையில் உள்ளவர்களுக்கும் கர்ப்ப காலத்தில் பாதிப்பு ஏற்படலாம்.

• மன நல சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை நிறுத்திவிட்ட பெண்களுக்கு பாதிப்பு வர அதிக வாய்ப்பு உண்டு.

• ஆரோக்கியமான பெண்களுக்கும் அச்சம், தனிமை, எதிர்கால பயம், பொருளாதார சிக்கல் காரணமாக மனநல பாதிப்பு தென்படலாம்.

• எதிர்பாராமல் கர்ப்பம் நிகழும்போது அல்லது கர்ப்ப தடுப்பு முறைகளைத் தாண்டி கர்ப்பம் தரிக்கும்போது பதட்டம், ஏமாற்றம் காரணமாகவும் மனநலம் பாதிக்கப்படலாம்.

இதுபோன்ற சூழலில் கர்ப்பிணி பெண்ணுக்கு கணவனின் அன்பும், உறவுகளின் அரவணைப்பும்தான் தேவை. கர்ப்பிணிக்கு கோபம், ஏமாற்றம், டென்சன் ஏற்படும்போது, அவளுக்கு சந்தோசமான மனநிலை உருவாக்கிக்த் தரவேண்டியது குடும்பத்தாரின் கடமையாகும். கர்ப்பிணியின் மனநலம் குறித்த மேலும் சில தகவல்களை நாளை பார்க்கலாம்.