கம்பங்கூழ் சாப்பிட்டால் என்ன கிடைக்கும்?

நீர்ச்சத்து, அத்தியாவசிய உப்புகள், பலவித வைட்டமின்கள் நிறைந்த கூழ் வகைகளில் அதிக சத்துக்கள் நிரம்பியது கம்பங்கூழ்.. அதனால்தான் நம் முன்னோர்கள் இதனை தினமும் காலையில் குடித்துவந்தார்கள்.


·         அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும்  நார்ச்சத்துகள் நிரம்பியிருப்பதால் கம்பு சாப்பிடும்போது எளிதில் செரிமானம் நடக்கிறது.

·         தினமும் கம்பங்கூழ் குடிப்பதால் உடலுக்கு நன்கு குளிர்ச்சியுண்டாகும். வெயில் காலத்திற்குத் தேவையான நீர்ச்சத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

கம்பை நன்கு வறுத்து, பொடித்துநாட்டுச்சர்க்கரை சேர்த்து வளரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் தேறாத குழந்தைகளும் சத்துப்பிடித்து நன்கு தேறி வளருவார்கள்.