புளித்த தயிரை என்ன செய்ய வேண்டும் ??

நம் உடலுக்கு அரு மருந்து என்றே தயிரை சொல்லலாம். தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனைவிட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். உடலுக்கு குளிர்ச்சியும் நல்ல ஜீரண சக்தியும் தரும்.


·         வயிறு சரியில்லாத நேரத்தில் வெறும் தயிர் சோறு மட்டுமாவது உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போதும் வயிற்று பொருமலுக்கும் தயிர் நல்லது.

·         தயிரில் அதிகமான கால்சியம் இருப்பதால் பெனோபாஸ் வயதை எட்டும் பெண்களின் எலும்புக்கு மிகவும் ஏற்றது.  

·         புளித்த தயிரை சாப்பிடுவது நல்லதல்ல. ஆனால்  தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.  மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிப்பது அனைவருக்கும் நல்லது.