சர்க்கரை கசக்கிற சர்க்கரை – எலும்புக்கு என்ன ஆபத்து ??

இனிப்பு என்றால் சப்புக்கொட்டி சாப்பிடுவதுதான் நம் வழக்கம். குறிப்பாக குட்டிக் குழந்தைகள் வெள்ளை சர்க்கரையை அப்படியே சாப்பிடுவது உண்டு. வெண்மையாக இருப்பது எல்லாம் நல்லது அல்ல என்பதற்கு அருமையான உதாரணம் வெள்ளை சர்க்கரை.


காபியில் தொடங்கி ஐஸ்க்ரீம், சாக்லேட் என்று சர்க்கரை இல்லாத இடமே இல்லை. தொடர்ந்து சர்க்கரையை அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

• சர்க்கரை உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு பற்களில் உள்ள எனாமல் அரித்து ஓட்டையாகிறது.

• சர்க்கரை அதிகம் எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கிறது. இதனால் இதயநோய் வர வாய்ப்புண்டு.

• அளவுக்கு அதிகமான சர்க்கரை எலும்பில் உள்ள கால்சியத்தைக் குறைத்து எலும்பை பலம் குறைய வைக்கிறது.

• உடல் பருமன், சரும நோய், சிறுநீரக குறைபாடு ஏற்படவும் சர்க்கரை காரணமாக இருக்கிறது.

உடலுக்கு எந்த சத்துக்களும் தராத வெள்ளை சர்க்கரையைக் குறைத்து நாட்டு சர்க்கரை பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.