கர்ப்பகால நீரிழிவு எப்படிப்பட்ட பெண்களுக்கு வருகிறது ??

கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் அதிகப்படியாக ஹார்மோன்களை சுரப்பதால், உடலில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது. சர்க்கரையை கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவிடாமல் இந்த ஹார்மோன்கள் தடுப்பதால், கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது என பார்த்தோம். இந்த பிரச்னையால் அதிகமாக யார் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.


·         28 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்கள் அதிக அளவில் கர்ப்பகால நீரிழிவால் பாதிக்கப்படுகிறார்கள்.

·         குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கும்பட்சத்தில், கர்ப்பிணிக்கு நீரிழிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது.

·         உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

·         முதல் குழந்தையை அதிக எடையுடன் பெற்றெடுத்த பெண்களுக்கும் கர்ப்பகால நீரிழிவு தோன்றலாம்.

    இந்தக் காரணங்கள் தவிர்த்து அடிக்கடி கருச்சிதைவுக்கு ஆளான பெண்களுக்கும் கர்ப்பகால நீரிழிவு தோன்றலாம். மேலும் அதிக ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளான பெண்களுக்கும் இந்தப் பிரச்னை தோன்றலாம். ஆனால் கர்ப்பகால நீரிழிவு கண்டு யாரும் அச்சப்பட அவசியம் இல்லை. பிரசவம் முடிந்ததும் கர்ப்பகால நீரிழிவு மறைந்துவிடும்.