கண் திருஷ்டியால் வரும் ஆபத்துகள்! கண் திருஷ்டியில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

'திருஷ்டி' எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பது.


இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத்தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

கண் திருஷ்டியை கண்டுபிடிப்பது எப்படி?

திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. எதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம். சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம். வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.

நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பெளர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம் வலர்பிறை, வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம். வாசலுக்கு மேல் ஒரு எலுமிச்சை, 5 பச்சை மிளகாய் என மாறி மாறி கயிற்றில் கோர்த்து தொங்கவிடலாம். இதனை செவ்வாய் கிழமைகளில் செய்யலாம்.

ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர் கண்பார்வை படும் படி வைக்கவும் கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி அதைஇடம் வலமாக மாற்றி எறியுங்கள். அல்லது கடையை மூடும் போது ஒரு எலுமிச்சம் பழத்தில் கற்பூரம் வைத்து உங்களுக்கும் கடைக்கும் சேர்த்து சுற்றி அதை நசுக்கி இட வலமாக மாற்றி எறியுங்கள்.

குழந்தைகள் வீட்டில் இருக்கும்போதும் வெளி இடங்களுக்கு அவர்களைக் கூட்டிச் செல்லும்போதும் கட்டாயம் குழந்தைகள் கன்னத்தில் ஒரு திருஷ்டி பொட்டு வைத்திருக்க வேண்டும். ஒரு நிமிடம் கூட குழந்தைகள் திருஷ்டி பொட்டு இல்லாமல் இருக்கக் கூடாது. இது பெற்றோர்களின் தலையாய கடமை. 

இவையனைத்துக்கும் மேலாக வாழ்வில் நன்மைகளை உண்டாக்க வல்ல தெய்வமாக பைரவர் இருக்கிறார். அவரை வழிபடுவதற்குரிய பைரவர் மூல மந்திரம்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம –

காக்கும் கடவுளான பைரவரின் மூல மந்திரம் இது. அமாவாசை அன்று காலை அல்லது மாலை வேளையிலும், வாரத்தின் எந்த கிழமையிலும் வரும் ராகு காலத்தின் போது பைரவரின் சந்நிதியில் பஞ்சதீப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, இத்துதியை 9 முறை அல்லது 27 முறை கூறி வழிபடுவதால் எப்படிப்பட்ட கண்திருஷ்டிகளும் நீங்கும். நமக்கு ஏற்படும் வீணான மனக்கவலைகள் நீங்கும். துஷ்ட சக்திகள் நம்மையும், நம்மை சார்ந்தவர்கள் மற்றும் நமது இல்லத்தை அணுகாது. ஆபத்துகள், கண்டங்கள் ஏற்படாமல் காக்கும் அது பைரவர் நவகிரகங்களை தன்னகத்தே கொண்டவர் என்பதால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களின் தாக்கம் குறைந்து வாழ்வில் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும்.