பாவம் கேப்டன்! மேடையில் தடுமாறி விழுந்த பரிதாபம்! போஸ் கொடுப்பதில் மும்முரமாக இருந்த பிரேமலதா! கண்ணீர் விட்ட தொண்டர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று நடந்த கட்சி விழாவில் தவறி விழுந்த சம்பவமானது தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் நடிகர் விஜயகாந்த். இவர் இன்று தன்னுடைய 67-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்பே தன்னுடைய பிறந்தநாள் அன்று ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அரசியலுக்கு வந்த பிறகு தன்னுடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ம் தேதியை "வறுமை ஒழிப்பு தினமாக" கொண்டாட தொடங்கினார். ஆனால் எப்போதும் போல ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இத்தகைய நலத்திட்ட உதவிகளால் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்தனர்.

கடந்த 2 வருடங்களாகவே விஜயகாந்தின் உடல்நிலை சரியாக இல்லை. அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றும் அவரால் பழைய நிலைக்கு திரும்ப இயலவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட அவரால் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்த இயலவில்லை. மீண்டும் அமெரிக்கா சென்று சிறிது நாட்கள் சிகிச்சை பெற்று இந்தியா திரும்பியுள்ளார்.

இந்நிலையில் விஜயகாந்துக்கு எப்பொழுதும் உதவிக்கென்று 2 பேர் தேவைப்படுகிறது. அவர் நடக்கும் போதும், உட்காரும் போதும் 2 பேர் அவரை கைத்தாங்கலாக பிடித்துக் கொள்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்திவரதர் பெருமாளை தரிசிக்க சென்ற போதும் இதே நிலையிலே சென்றார்.

தன்னுடைய 67-வது பிறந்தநாளையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்வதற்கு தேமுதிக சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வழக்கம் போல விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது நலத்திட்ட உதவிகள் வழங்க அனைவரும் தயாராகினர். பயனாளிகள் அங்கு வந்தனர். போட்டோவுக்கு போஸ் கொடுக்க பிரேமலதாவும், சுதீசும் தயாராக, கேப்டனை யாரும் கவனிக்கவில்லை. இதனால் எப்போதும் 2 பேர் உதவியுடன் நிற்க கூடிய விஜயகாந்த் நிலைதடுமாறி கீழே விழுகிறார். ,

ஆனால் உடனடியாக அருகிலிருந்த இருவரும் அவரை கைத்தாங்கலாக நாற்காலியில் உட்கார வைத்தனர். அதன் பிறகு அவர் புன்சிரிப்புடன் நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த காட்சியை கண்ட தேமுதிக தொண்டர்கள் கண்கலங்கி விட்டனர். மீண்டும் தங்கள் தலைவரை அதே கம்பீரத்துடன் எப்போது பார்ப்போம் என்ற கவலை அவர்களின் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறது. இந்த சம்பவமானது தேமுதிக தொண்டர்கள் இடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.