நைட் ஷிப்ட் செல்பவர்களுக்கு என்னென்ன நோய்கள் வரலாம் ?? மருத்துவ எச்சரிக்கை ரிப்போர்ட் !!

இன்றைய நவீணா வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இரவு ஷிப்ட் வேலை என்பது தவிர்க்கமுடியாத அம்சமாகிவிட்டது. சொல்லப்போனால் நிறைய பேருக்கு அதுதான் வசதியான பழக்கமாகத் தெரிகிறது. இரவு பணி முடித்து வீட்டுக்கு வந்ததும் நாலைந்து மணி நேரம் தூங்கினாலே ஃபிரெஷ் ஆன உணர்வு கிடைத்துவிட்டது என்கிறார்கள்.


ஆனால், அது உண்மை அல்ல. மனித உடல் இரவில் தூங்கி பகலில் விழித்திருக்கும் வகையில் படைக்கப்பட்டது. ஆஆணாஆள் இரவில் விழித்து பகலில் தூங்குவதால் ஏராளமான உடல்நலப் பிரச்னைகள் தோன்றும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

!.  மரபணு சிதைவு  : கோடானுகோடி செல்களால் ஆனது இந்த உடம்பு. இந்த செல்கள் அனைத்துமே அதனதன் வேலையை செய்யும்படி அமைக்கப்பட்டவை. இரவு விழித்திருக்கும்போது செல்கள் குழப்ப நிலையை அடைந்து மரபணு சிதைவு ஏற்படுகிறது.

2. புற்று நோய் : மனித செல்களில் ஏற்படும் குளறுபடியே புற்றுநோய் ஆகும். மரபணு சிதைவு ஏற்படுவதன் காரணமாகவே புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது. அதேபோன்று வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது.

3. வளர்சிதை மாற்றம் காரணமாக இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் முதல் பிரச்னை நீரிழிவு நோய். இந்த நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தபடாத பட்சத்தில் இதய கோளாறு ஏற்படுகிறது.

4. சரியான, போதுமான தூக்கம் இல்லாத பட்சத்தில் ஏற்படும் மிக முக்கிய பிரச்னை நரம்புக் கோளாறு ஆகும். நரம்பு பிரச்னை காரணமாக வாதம் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம்.

5. மூச்சுப் பிரச்னையும் தூக்க குளறுபடியால் உண்டாகிறது. நுரையீரல் பிரச்னை, தொற்று, போன்ற காரணங்களால் இயல்பான வாழ்க்கை வாழமுடியாத சூழல் உருவாகிறது.

இத்தனை பிரச்னைகள் இருப்பதன் காரணமாக இரவு ஷிப்ட் வேலை பார்ப்பவர்களிடம் இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்துவிடுகிறது. நோய்த் தொற்றுக்கு ஆளாகி பெரும் பிரச்னை ஏற்படலாம். அதனால் இரவுப் பணியை தவிர்ப்பது நலம்.